ஷஹிர் ஹா மஹாராஷ்டிரச்சா பிராண்
காத்தோ மே ஷிவாஜிச்சே குணாகான்…

கவிஞன்தான் மகாராஷ்டிராவின் ஆன்மா
நான் சிவாஜியின் புகழைப் பாடுகிறேன்…

என் அம்மாவின் நவுவாரி கஷ்டா புடவை கட்டிக் கொண்டு, தலையில் ஃபேடா (தலைப்பாகை) அணிந்து, கையில் என் தம்பியின் நெகிழி வாளை ஏந்தியபடி எனது பள்ளி மேடையில் இந்த போவாடாவை பாடினேன். தீபாலி நைல்கார் ஆகிய நான் 12 வயதில் முதல்முறையாக போவாடா பாடினேன். அதற்கு முந்தைய நாள் இரவில் தான் அதை நான் எழுதினேன்.

போர் தாலுக்கா நஸ்ராப்பூர் கிராமத்தில் நான் படிக்கும் அரசுப் பள்ளியில் அனைவரும் என்னை கவனித்தனர். நிகழ்ச்சிக்குப் பிறகு எனது தோழிகள் ‘போவாடா பெண்’ என்று எனக்கு பெயரிட்டனர். உணர்வுகளை வெளிப்படுத்தும் போவாடா ஒரு மராத்திய பராம்பரிய நாட்டுப்புறக் கதைப்பாடல் கலை. சத்ரபதி சிவாஜி மகராஜ் போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் மற்றும் அவர்களின் வீரர்கள் ஆகியோரின் பெருமைகளை கொண்டாடுகிறது. இது ஸ்வர தாளத்துடன் பாடப்படுவதால் எளிதில் நினைவில் கொள்ள வைக்கிறது.

இசை மீதான காதல் எங்கள் குடும்பத்தில் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. 42 வயதாகும் எனது தாய் ருக்மிணி நைல்கார், சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜி மகராஜ் பிறந்த புரந்தர் கோட்டை அடித்தளத்தில் உள்ள நாராயண்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் அபங்குகளை[பக்திப் பாடல்கள்] பாடுகிறார். இதுபோன்ற போவாடா உருவாக்க எனக்கு உதவுகிறார். அவரது தந்தை ஜத்ராஸ் [நாடகம்], தமாஷா மற்றும் நாட்டிய ரூபந்தார் [நாடகத்தை தழுவியது] ஆகியவற்றில் பாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். நான் எப்போதும் மராத்திய கலாச்சாரம், இலக்கியத்தை படிக்க விரும்புகிறேன். மகாத்மா காந்தி மற்றும் டாக்டர் பாபாசாஹிபின் உரைகளை பள்ளியில் படித்தது ஊக்கமளிப்பதாக உள்ளன.

சின்ஹகாட்டில் [புனே மாவட்டம் கேரா சின்ஹாட்டில் உள்ள மலைக்கோட்டை] எனது குடும்பம் ஆறாவது தலைமுறையாக வாழ்ந்து வருகிறது. நான் ஏற்கனவே பலமுறை கேட்ட கோட்டையின் வரலாற்றை என் அத்தையிடம் அடிக்கடி கேட்டு மகிழ்வேன். தனாஜி மலுசாரி சிங்கம் போன்ற இதயத்தை கொண்ட மாவீரர், சின்ஹகாட் [கொண்டனா என்று முன்பு அறியப்பட்டது] மீது படையெடுத்தார். தனாஜியின் மரணத்தின் போது சிவாஜி இதைச் சொன்னதாக நம்பப்படுகிறது:

‘மஜா காட் ஆலா, பான் சின்ஹா கேலா’
‘என் கோட்டையை வென்றேன், ஆனால் என் சிங்கத்தை இழந்துவிட்டேன்’

ஆறாவது தலைமுறையாக தீபாலியின் குடும்பம் சின்ஹகாட்டில் [புனே மாவட்டம் கேரா சின்ஹகாட்டில் உள்ள மலைக்கோட்டை] வாழ்ந்து வருகிறது. அதிதி தின்டோர்கர் எடுத்த புகைப்படம்

வீட்டிற்கு அருகே உள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு வரை மட்டுமே உள்ளதால், 8ஆம் வகுப்பிற்கு நான் வேறு பள்ளிக்கு மாறினேன். நஸ்ராபூரில் உள்ள ஸ்ரீ சத்ரபதி சிவாஜி வித்யாலயாவில் படித்தேன். அது எனது வீட்டிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளதால் தினமும் எட்டு கிலோமீட்டருக்கு நடந்து சென்று வருகிறேன்.

என் தந்தை தத்தாத்ரேயா நைல்காருக்கு இந்த ஆண்டு ஒரு விபத்து ஏற்பட்டது. அவரது சிகிச்சைக்கு ஒன்று முதல் இரண்டு லட்சம் ரூபாய் செலவாகும் என மருத்துவர் எங்களிடம் தெரிவித்தார். சிகிச்சை அளித்தாலும் கால் முழுமையாக நலமடையும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்றுத் தெரிவித்தார். அவரையும், எனது இளைய சகோதரர்கள் லோகேஷ், பண்டி இருவரையும் என் தாய் கவனித்துக் கொள்வதால் குடும்பத்திற்காக நானே வருவாய் ஈட்ட தொடங்கிவிட்டேன்.

நான் 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டே நஸ்ராபூரில் பகுதி நேர வேலைகளை செய்து வந்தேன். காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளியில் படித்துவிட்டு பிறகு இரவு 8 மணி வரை விற்பனையாளராக வேலை செய்து வந்தேன். சில மாதங்களில் நான் சோனோகிராபி சிகிச்சை மையத்திற்கு மாறியதால் படிவங்களை நிரப்புவது, கட்டுப் போடுவது, இரத்த அழுத்தத்தை பரிசோதிப்பது, ஊசிப்போடுவதைக் கூட நான் கற்றுக் கொண்டேன். இங்கு எனக்கு மாதம் ஐந்தாயிரம் ரூபாய் கிடைத்தது.

10ஆம் வகுப்பிற்கு பிறகு அதேப் பள்ளியில் இளையோர் கல்லூரியில் [11 மற்றும் 12ஆம் வகுப்புகள்] சேர்ந்தேன். கலாச்சார நிகழ்ச்சிகளில் போவாடா பாடுவதை தொடர்ந்தேன். 2015ஆம் ஆண்டு 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது நான் பங்கேற்ற கல்லூரி குழு நடனப் போட்டியில் முதலிடம் பெற்றது. போர் முழுவதிலும் இருந்து வந்திருந்த எல்லா குழுவினரும் ஒரே பாடலை பாடினோம். ஆனால் எங்களுக்கு தான் முதலிடம் கிடைத்தது!

இதுபோன்ற விஷயங்களில் மகிழ்ச்சி கிடைத்தாலும், அதை ஒரு தொழிலாக என்னால் தொடர முடியாது. குடும்பத்தை கவனிக்க நிலையான வேலையை நான் தேட வேண்டும். மாநில அஞ்சல் சேவையில் சேர தேர்வு எழுதினேன். நாங்கள் கோலி மகாதேவ் (மஹாதேவ் கோலி என்றும் அழைக்கப்படுகிறது) சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் மகாராஷ்டிராவில் எங்களை பட்டியலின பழங்குடியினராக கணக்கிடுகின்றனர். இதை நிரூபிக்க எங்கள் குடும்பத்திடம் சாதி சான்றிதழ் இல்லை. கணக்கெடுப்பு எடுக்க வந்த நபர் எங்களிடம் ஜூன்னாரில் மட்டுமே கோலி மகாதேவ் உள்ளதாகவும், போரில் கிடையாது என்றும் கூறினார். ஆனால் நாங்கள் போரில் தான் இத்தனை காலமாக வாழ்ந்து வருகிறோம். 150 ஆண்டு பழமையான ஆவணங்களை எங்களிடம் கேட்டனர். எங்களிடம் அப்படி எதுவும் கிடையாது. எங்கள் முன்னோர்கள் அரசுப் பணிகளில் இருந்துள்ளனர். ஆனால் அதை நிரூபிக்க எங்களிடம் சான்றுகள் இல்லை.

2018ஆம் ஆண்டு புனே நகரின் ஜனசேவா அறக்கட்டளையில் செவிலியர் பயிற்சிக்கு நான் பதிவு செய்தேன். வணிகவியல் படித்துள்ள எனக்கு செவிலியர் துறையில் உண்மையில் ஆர்வம் கிடையாது. ஆனால் இத்துறையை தந்தை தான் எனக்கு தேர்வு செய்தார். அத்துறையில் வாய்ப்பு கிடைத்தப் பிறகு முடிந்தவரை சிறப்பாக என்னை தகுதிப்படுத்திக் கொண்டேன். இப்போது மாதம் 10,000 ரூபாய் சம்பாதிக்கிறேன்.

தீபாலி, புனே நகரின் ஜனசேவா அறக்கட்டளையில் செவிலியர் பயிற்சிப் பெற்றார்

கோவிட்-19 முதலாவது அலையின்போது, கிராமப்புறமான வெல்ஹி தாலுக்காவில் உள்ள பன்ஷெட் மற்றும் போர் தாலுக்கா நஸ்ராப்பூரில் என்னை பணியமர்த்தினர். சுகாதார பணியாளர்களான நாங்கள் வெளியே வந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை தவிர வேறு வழியில்லை. எனினும் என் குடும்பத்தின் பாதுகாப்பில் நான் முன்னெச்சரிக்கையுடன் இருந்தேன். நான் குளித்துவிட்டு வரும் வரை என் தாயை கூட சந்திக்க அனுமதிக்க மாட்டேன். நிறைய வேலையும், பயணமும் இருந்ததால் எனது உடல்நலம் பாதிக்கப்பட்டது. பெற்றோரும் என்னைப் பற்றி கவலைப்பட்டதால் நான் மீண்டும் சின்ஹகாட்டிற்கு திரும்பிவிட்டேன்.

விபத்திற்கு பிறகு என் தந்தை முழுமையாக குணமடையவே இல்லை. ஆனால் சின்ஹகாட் மலையில் ஜூஸ் கடை நடத்தும் வேலைக்கு திரும்பிவிட்டார். அவர் 50 கிலோ வரையிலான பழங்கள், நொறுக்குத் தீனிகளை மலை மீது எடுத்துச் செல்கிறார். அவரைப் பற்றி இங்கு படிக்கவும்.

நான் மீண்டும் எனது செவிலியர் பணிக்கு பதிவு செய்து பணியை தொடங்க உள்ளேன். அதற்காக காத்திருக்கும் வரை என் மனதிற்கு நெருக்கமான போவாடாவை பற்றி அவ்வப்போது சிந்திப்பேன். துரதிர்ஷ்டவசமாக செவிலியர் பணிக்கு இடையே புதிதாக எதுவும் எழுத நேரம் கிடைப்பதில்லை. ஆனால் ஒரே போவாடாவை பண்டிகைகளில், செவிலியர் பணியாளர் விழாக்களில் நான் பாடுவேன். புதிய மருத்துவமனையிலும் இதை பாட வாய்ப்பு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கிறேன்.

தொலைக்காட்சி தொகுப்பாளராகி தூர்தர்ஷனில் பேச வேண்டும் என்பது எனது கனவு. நேர்காணல் என்பது ஒரு கலை. மஜ்யாத் குப் காலா ஆஹே [என்னுள் நிறைய கலை நிறைந்திருக்கிறது].

‘என் கோட்டை வென்றும், என் சிங்கத்தை இழந்துவிட்டேன்’: ‘சின்ஹகாட் நாட்டுப்புறக் கதைப்பாடலை’ சொல்லும் தீபாலி

எனவே கொண்டனா கோட்டையை தனது ஆட்சிக்குள் கொண்டுவர சிவாஜி மகராஜ் விரும்பினார்

அவர் ஒரு திட்டம் தீட்டினார்

சிவாஜி மகராஜின் நண்பரான தனாஜி மலுசாரியின் மகன் ரைபாவிற்கு திருமணம் நடக்க இருந்தது.

திருமணத்திற்கு சிவாஜி மகராஜை அழைக்க தனாஜி வந்தார்.

சிவாஜி மகராஜ் மற்றும் அவரது தாய் மாசாஹிப் ஆலோசனையில் இருந்தனர்.

தனாஜி: ’மகராஜ், இந்த ஏழை வீரன் உங்களை வணங்குகிறேன். ஆனால் நீங்கள் வேறெங்கோ செல்வதாக தெரிகிறது. எங்கு பயணம் செல்கிறீர்கள்?’

மகராஜ் சொல்கிறார்: ‘தனாஜி, நாம் கொண்டனாவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும். அங்கு அந்நியர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இச்சமயத்தில் கொண்டனாவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது அவசியம்.’

தனாஜி சொல்கிறார், ‘நான் உயிருடன் இருக்கும்போது நீங்கள் போருக்கு செல்லலாமா? இது நடக்கக் கூடாது. முதலில் நாம் கொண்டனாவை கைப்பற்றிய பிறகே என் மகன் ரைபாவிற்கு திருமணம்.’

போர் முரசு ஒலிக்கிறது,‘ஹர ஹர மகாதேவா!’

தனாஜி தனது மனைவியிடம் சொன்னார், ‘நான்’ வீரர்களுடன் போருக்கு செல்கிறேன்

அவரது மனைவி சொன்னாள், ‘மகனின் திருமணம் நெருங்கும் நேரத்தில் நீங்கள் எப்படி போருக்கு செல்வீர்கள்?’

‘முதலில் நாம் கொண்டனாவை கைப்பற்ற வேண்டும். பிறகு தான் ரைபாவின் திருமணம். நீ திருமண வேலைகளை தொடங்கு. நான் பிறகு வந்து விடுகிறேன்.’

இதை சொல்லிக்கொண்டே தனாஜி தனது வீரர்களை திரட்டி புறப்படுகிறார்.

அவரது மனைவி ஆரத்தி எடுக்கும்போது விளக்கு அணைகிறது.

அவரது மனைவி சொல்கிறார்,‘விளக்கு அணைந்துவிட்டது! இது நல்லதல்ல. கெட்ட சகுணம்.’

‘எது கெட்ட சகுணம்?’ இப்போதே உன் நெற்றியில் வைத்துள்ள குங்குமத்தை அழிக்கிறேன். என் பாதையில் குறிக்கிடும் கெட்ட சகுணத்தை நாம் பார்க்கலாம். எனக்கு எதுவும் நேராது.‘

பிறகு தனாஜியின் படை எங்கள் முன்னோர்களின் வீடு இருந்த நைக் வாடாவிற்கு வந்தது

நாட்டுப்புறப் பாடல்: நாங்கள் கொந்தாலிகள். அம்பா அம்மனின் கொந்தாலிகள். நாங்கள் கொந்தால் செய்கிறோம். வாசுதேவ் ஹரியே எங்களை பாதுகாத்திடு

வீரர்களிடம் நைக் சொன்னார், ‘கோட்கிரி எனும் கொடுஞ்சரிவுப் பாறை உள்ளது. அப்பக்கத்திலிருந்து நீங்கள் கொண்டானாவிற்கு ஏறலாம்.’

300 வீரர்களுடன் தனாஜி கோட்கிரி மலைச்சரிவை நோக்கி புறப்படுகிறார். கயிறுகள் இறுக்கமாக கட்டப்பட்டன. ஒரு வீரன் கீழே விழுகிறான். இறுதியாக அவர்கள் உடும்பின் வாலில் கயிற்றை கட்டி ஏறுகின்றனர்.

தனாஜி மலுசாரி முகலாயரின் கொட்டகைக்குள் நுழைகிறார். ஒரு ஷாமியானாவில் அவர் உறங்கிக் கொண்டிருந்தார்.

தனாஜி சொன்னார், ‘ஏய்! என்ன உறக்கம்! உன்னை பார்க்க யார் வந்திருக்கிறார் என்று பார்!‘ உனக்கு துணிவிருந்தால் எழுந்திடு!

உதய்பான் எழுந்தார், குழப்பத்துடன்.

‘ஏய் கான்’ என்றார் தனாஜி, போர் தொடங்கியது.

சண்டையின்போது தனாஜி பிடித்திருந்த கவசம் உடைகிறது. அவரது கையில் விழுந்த வெட்டை துணிக் கொண்டு அவர் கட்டிக் கொள்கிறார். அப்போதும் அவர் சண்டையிடுகிறார்

ஷெலர் மமா உதய் பானை தாக்குகிறார்

தனாஜி மலுசாரி கீழே விழுகிறார். தனது நாயகன் இரத்த வெள்ளத்தில் கிடப்பதை ஷெலர் மமா பார்த்தார்

வீரர்கள் கோட்டையை விட்டு ஓடத் தொடங்கினர்.

ஷெலர் மமா சொன்னார், ‘எங்கே ஓடுகிறீர்கள்? ஓடுவதென்றால் வளையல் அணிந்துக் கொள்ளுங்கள்! வீரனாக இறந்திடுங்கள்! நம் வீரன் ரத்த வெள்ளத்தில் கிடந்தால் என்ன செய்வீர்கள்? உங்கள் மணிக்கட்டில் பலமில்லையா?‘

உதய் பானை ஷெலார் மமா கொன்றார்
உதய் பானை ஷெலார் மமா கொன்றார்
அவரது தொண்டையைக் கிழித்தார்

ஷெலர் மமா அப்போது தேநீர் அருந்துவார். அவரது பற்கள் வலுவாக அதற்கு காத்திருந்தன. தேநீர் அருந்திய பிறகும் வீரரின் பற்கள் வலுவாக இருக்கும். அவர்கள்தான் உண்மையான வீரர்கள்.

உதய் பானின் தொண்டையை கிழித்த ஷெலார் மமா அவரது இரத்தத்தை குடித்தார்.

பிறகு போர் தொடர்ந்தது.

மராத்தியர்கள் போரில் வென்றதும், தீப்பந்தம் ஏற்றினர். பழங்காலத்தில் தீப்பந்தம் ஏற்றி மன்னருக்கான சமிக்ஞையாக.பயன்பட்டது.

சிவாஜி சொன்னார், ‘நாம் கோட்டையை வென்றோம். ஆனால் சிங்கம் போன்ற என் வீரனை இழந்துவிட்டோம். அதனால் தான் கொண்டனா என்ற கோட்டையின் பெயர் சின்ஹகாட் (சிங்கக்கோட்டை) என்று மாறியது. என் கோட்டையை வென்றேன் ஆனால் என் சிங்கத்தை இழந்துவிட்டேன்.’

So, Shivaji Maharaj wanted to bring the fort of Kondana under his rule

He had come up with a plan

Shivaji Maharaj had a friend, Tanaji Malusare, whose son Raiba, was to be married.

Tanaji came to invite Shivaji Maharaj to the wedding.

Shivaji Maharaj and his mother, Maasaheb were engaged in discussion.

Tanaji: ‘Maharaj, this poor soldier bows to you.But you seem to be going somewhere. Which journey are you off to?’

Maharaj says: ‘Tanaji, we have to take Kondana under our control. There is too much foriegn dominance. It is necessary to take Kondana under our control at this time.’

Tanaji says, You will go to battle while I’m still alive? This can’t happen. First we conquer Kondana, only then my Raiba will get married.’

The battle cry rang, ‘Har Har Mahadev!’

Tanaji told his wife, ‘I’m going for battle with the soldiers’

His wife said, ‘How can you go to battle when your son’s marriage is around the corner?’

‘First we will conquer Kondana, only then Raiba will get married. You start the wedding preparations. I will come till then’.


Saying this, Tanaji gathered all his soldiers to leave.

His wife got the pooja thali. The lamp blew out.

His wife says, ‘The lamp blew out! It’s not a good time. It’s an ill omen.’

‘What ill-omen?’I’ll wipe the vermillion off your forehead right now. Let me see what ill-omen crosses my path. Nothing will happen to me.’

After that, Tanaji’s regiment came to our ancestor’s house, the Naik’s wada

Folk song: We are the gondhalis. Amba goddess’ gondhalis. We perform the gondhal. Vasudev Hari take care of us

So, Naik said to the soldiers,‘There is a cliff called Kodgiri. You can climb Kondana from that side.’

With 300 mavle, Tanaji began ascending the Kodgiri Cliff. The ropes were stretched too tight. The mavle fell down.Finally, they tied a rope to a monitor lizard’s tail and climbed up.

Tanaji Malusare entered the Mughal’s tent.The shamiyana in which he was sleeping.

Tanaji said, ‘Bah! You’re sleeping! Look who’s here to meet you! Wake up if you have the courage!

Uday Bhan woke up, disoriented.

‘Ay Khan’ said Tanaji, and their battle began.

While fighting, the shield in Tanaji’s hand shattered. He wrapped a shawl around his cut hand. He still he kept fighting

Shelar Mama struck Uday Bhan

When Tanaji Malusare fell down, Shelar Mama saw his hero lying in a pool of blood

The mavle began fleeing along the edge of the fort.

Shelar Mama said, ‘Where are you running? Wear bangles if you want to run away! Die like soldiers! So, what if our hero is lying in a pool of blood? Does your wrist have no strength?’

Shelar Mama killed Uday Bhan
Shelar Mama killed Uday Bhan
He ripped apart his throat

Shelar Mama used to drink tea at that time. But still his teeth were strong. Mavle’s teeth are strong even after drinking tea. These are the real mavle.

So, Shelar Mama slit Uday Bhan’s throat and drew his blood.

After that the battle ensued.

When the Marathas won the battle, they lit a torch. In the olden times, the torch used to be a signal to the king.

Shivaji said, ‘We won the fort. But I lost my soldier who was like a lion. That is why the name of this fort was changed from Kondana to Sinhagad (lion-fort). I won my fort but I lost my lion.’

இது நைல்கார் குடும்பம் குறித்த அதிதியின் இரண்டாவது கதை. தத்தாத்ரேயா நைல்கார் பற்றி அவரது குறிப்புகளில் இங்கு படிக்கலாம்.

Editor's note

அதிதி தின்டோர்கர் அஷோகா பல்கலைக்கழகத்தின் ஆங்கிலம் மற்றும் கற்பனை எழுத்து துறையின் மூன்றாமாண்டு இளநிலை மாணவி. பாரி கல்வி பயிற்சி திட்டத்தின் ஓர் அங்கமாக இக்கதையை ஆராய்ந்து அவர் எழுதினார். இசை மீது தீபாலி கொண்டுள்ள காதலும், உள்ளூர் வரலாறு குறித்த அவரது அறிவும் அதிதியை ஊக்கப்படுத்தியது. அவர் சொல்கிறார், “போவாடா போன்ற உள்ளூர் இசை மரபுகளை பதிவு செய்து பாதுகாப்பதில் அங்கம் வகிக்க நான் விரும்பினேன். தீபாலியை நேர்காணல் செய்து அவளது கதையை கேட்டது கிராமப்புற இந்தியாவின் சில காட்சிகளை காண்பித்தது.”

தமிழில்: சவிதா

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.