காய்ந்த நெற்கதிர்களில் செய்யப்படும் தேரணமே ஜூமர். பிரஜ்வால் தாக்கூர் எடுத்த புகைப்படம்

பத்தாண்டுகளுக்கும் மேலாக குமாரி பர்தி நெல் தோரணங்களைச் செய்து வருகிறார். அக்டோபர் – நவம்பர் மாதங்களில் அறுவடை செய்யப்படும் நெற்கதிரின் வைக்கோலில் இருந்து தான் ஜூம் எனும் நெல் தோரணம் செய்யப்படுகிறது. விவசாயியான அவர் கோரைப்புற்களில் துடைப்பங்கள், குப்பை முறங்கள் போன்றவற்றைச் செய்து ராய்பூர் சந்தையில் விற்று வந்தார். அங்கு விற்கப்பட்ட நெல் தோரணங்களின் மீது ஆர்வம் ஏற்பட்டு அவற்றை செய்யத் தொடங்கினார்.

சத்திஸ்கரில் நெல் அறுவடை என்பது தீபாவளியின் போது வருவதால் புதிய தானியங்களை பறவைகளுக்கு வைக்கும் லக்ஷ்மி பூஜைக்குப் பிறகு வீட்டு வாசலில் பல்வேறு வடிவ நெல் தோரணங்களை தொங்க விடுகின்றனர். காய்ந்த நெற்கதிர்களில் செய்யப்படும் இத்தோரண அலங்காரங்கள் இம்மாநிலத்தின் அறுவடை, திருவிழா மற்றும் பறவைகளுக்கு உணவளித்தல் ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பைப் பற்றி பேசுகிறது.

லக்ஷ்மி பூஜைக்குப் பிறகு பறவைகளுக்கு தானியங்களை உணவாக அளிக்க நெல் தோரணங்கள் வீட்டிற்கு வெளியே தொங்கவிடப்படுகின்றன. பிரஜ்வால் தாக்கூர் எடுத்த புகைப்படம்

சத்திஸ்கரில் அரிசி அதிகளவில் விளைகிறது. 3.76 ஹெக்டேர் நிலம் என்பது நாட்டின் மொத்த பரப்பில் பத்தாவது இடம் என்கிறது 2018ஆம் ஆண்டு வெளியான அரசின் அறிக்கை. குமாரி பார்தியின் புதேனி கிராமத்தில் பெரும்பாலான உழைக்கும் மக்கள் வேளாண் பணிகளைச் செய்கின்றனர். அவரைப் போன்ற விவசாயிகள் அவரது குடும்பத்தினர் கூடுதல் வருவாய்க்காக இரண்டு மற்றும் மூன்று பரிமாணங்களில் இந்த அலங்கார தோரணத்தைச் செய்கின்றனர். “சொந்தமாக நிலம் இல்லாதவர்கள் இவற்றைச் சந்தையிலிருந்து வாங்குகின்றனர்,” என்கிறார் குமாரி பர்தி. தம்தாரி மாவட்டம் மகர்லோட் வட்டாரத்தில் தங்களுக்கு என சொந்தமாக உள்ள ஆறு ஏக்கர் நிலத்தில் அரிசி, பிற பயிர்களை விளைவிக்கின்றனர். “எனக்கு இரு மகன்கள். இளையவன் படித்துக் கொண்டு வயல் வேலைகளிலும் எங்களுக்கு உதவி வருகிறான்,” என்கிறார் அவர்.

ஜூமர் செய்யும் குமாரி சோன்வாரி என்பவர் அதே மாவட்டத்தைச் சேர்ந்த கிராமத்திலிருந்து கிழக்கில் 50 கிலோமீட்டர் பயணித்து அவற்றை விற்க இங்கு [தலைநகர் ராய்பூருக்கு] வருகிறார். “இவற்றை விற்பதால் ஆண்டிற்கு 3-4000 ரூபாய் வரை கிடைக்கும்,” என்கிறார் குமாரி சோன்வாரி. கடந்தாண்டு பெருந்தொற்று காரணமாக குமாரி சோன்வாரியால் விற்பனை செய்ய முடியவில்லை. “உலகமே வருமானமின்றி நின்றுவிட்டது, நாங்களும் அப்படித் தான்,” என்றார் அவர்.

ஜூமர் செய்து சந்தைகளில் அவற்றை விற்கச் செல்லும் பெண்கள். பிரஜ்வால் தாக்கூர் எடுத்த புகைப்படம்

குருட் வட்டாரம் (சோர்முடியா) மரோட் கிராமத்தைச் சேர்ந்தவர் குமாரி சோன்வானி. தாம்தாரி மாவட்டத்தில் உள்ள அவரது கிராமம் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் நிறைந்தது. “தான் ஜூமர் என்பது இங்கு [சத்திஸ்கரில்] தீபாவளி கொண்டாட்டங்களின் ஒரு அங்கம்,” என்றார் அவர்.

ராய்பூரில் உள்ள திறந்த சந்தையான புராணி பஸ்தியில் புதேனியிலிருந்து வந்த மில்வாந்தின் பர்தியும் தான் ஜூமர் விற்கிறார். ஒரு மாதங்களுக்கு முன்பே இவற்றைச் செய்ய தொடங்கி நகருக்கு இப்போது எடுத்து வந்து அவற்றை விற்கிறார். “நகரில் எங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது, எனவே நாங்கள் செலவு செய்து இங்கு வந்து விற்கிறோம்,” என்று பேசிக் கொண்டே காய்ந்த நெற் கதிரில் மற்றொரு ஜூமர் செய்யும் அவர்.

Editor's note

பிரஜ்வால் தாக்கூர் பிலாயில் உள்ள டெல்லி பொதுப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கிறார். இவரது முந்தைய கட்டுரை 2021, ஜூன் 18ஆம் தேதி பிஹைண்ட் தி வீல்ஸ், அட் அ கிராஸ்ரோட்ஸ் என்று பாரியில் வெளியானது. தான் ஜூமர் குறித்து இக்கட்டுரையை அளிக்க அவர் விரும்பினார். அவர் சொல்கிறார், “பண்டிகைகளில் விவசாயிகளின் பங்கு, சத்திஸ்கர் மற்றும் அண்டை மாநிலங்களில் நெல்லின் முக்கியத்துவம் குறித்து அறிவதற்கு இக்கட்டுரை மிகவும் உதவியது. பாரி கல்வியில் வேலை செய்வதால் நான் வாழும் சமூகத்தைப் பற்றிய புதிய பார்வையை நான் பெற்றேன்,” என்று.

தமிழில்: சவிதா
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.