Skip to content
PARI Education
  • Stories
    • Agriculture
    • Covid 19
    • Education
    • Migrants
    • Photo stories
    • Things we make
    • Gender
    • Inspired by PARI
  • Get involved
    • Participating organisations
    • Testimonials
    • Donate
  • About
    • PARI Library
  • Return to PARI
  • Learning resources
  • Teachers’ blog
PARI Education
  • Stories
    • Agriculture
    • Covid 19
    • Education
    • Migrants
    • Photo stories
    • Things we make
    • Gender
    • Inspired by PARI
  • Get involved
    • Participating organisations
    • Testimonials
    • Donate
  • About
    • PARI Library
  • Return to PARI
  • Learning resources
  • Teachers’ blog
மார்ச் 2, 2021
Coimbatore,Tamil Nadu
Small world

இங்கே, ஒவ்வொரு நாளும் குழந்தைகள் தினம்

தமிழ்நாட்டில் இருக்கும் இந்தப் பள்ளிக்கூடத்தில், குழந்தைகள் எந்தவொரு அழுத்தத்தின் கீழும் வளராமல் அவர்கள் விருப்பப்பட்ட வேகத்தில் வளர்கிறார்கள்
Student reporter: Suzanne ter Haar

  • Tamil

`வித்யா வனம்’ வரவேற்கிறது. இது தமிழ்நாட்டில் கோயம்புத்தூருக்கு அருகில் இருக்கும் ஆனைக்கட்டியில் கிராமப்புற, பழங்குடி இனக் குழந்தைகளுக்கான பள்ளிக்கூடம்.

வித்யா வனத்தில் வரவேற்கும் முகங்கள்

வித்யா வனம், பாடப் புத்தகங்கள் எதுவும் இல்லாத ஒரு பள்ளிக்கூடம்.. குழந்தைகள் அவர்களுடைய பாடங்களை கருப்பொருள்களாக கற்றுக் கொள்கிறார்கள். உதாரணமாக, சென்ற ஆண்டு `அரிசி’ என்பது ஒரு கருப்பொருள். ஐந்து சிறு நிலங்களில் நெல் சாகுபடி செய்வது அவர்கள் கற்றுக் கொள்வதின் பகுதியாக இருந்தது. முதல் தலைமுறை ஆங்கிலம் பேசகூடியவர்களைக் கொண்ட இரண்டு குழுக்கள் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் குறித்து விவாதம் கூட செய்தார்கள்: கற்கும் வனத்தில் அரிசிகுறித்த விவாதம்

இது குழந்தைகள் அவர்களுடைய மனதில் பட்டதைப் பேசுவதற்கும், திறமைகளை வெளிப்படுத்துவதற்குமான பள்ளிக்கூடம். அவர்கள் இதை அவர்களின் வேகத்திற்கேற்பவே செய்கிறார்கள். எந்த அழுத்தமும் இல்லை. சிறிய குழந்தைகளில் சிலர் பிறக்கும்போதே `தலைவர்களாக’ பிறந்திருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. 

’தலைவராக’ ப் பிறந்த குழந்தை

12.15 மதிய உணவுக்கான நேரம். சில குழந்தைகள் அவர்களுடைய விருப்பமான நேரத்தை விளையாடி மகிழ்ந்து கொண்டிருக்கையில் பாட்டிகளும் அக்காக்களும் அதற்கு தயார் செய்து கொண்டிருப்பார்கள்.

எதிர்கால லியோனர் மெஸ்ஸி?
மூன்றில் ஒன்று வளையம்
வளையத்தின் இன்னொரு உபயோகம் (இடது); இன்னொரு பந்து விளையாட்டு (வலது)

திறந்தவெளியில் இருக்கும் உளவு அறையில்  புயலுக்கு முன் அமைதி நிலவுகிறது. 

குழந்தைகள் வருவதற்கு முன்பு உணவு அறையில் தட்டுகளும், பாய்களும்.

சிறிது நேரத்திற்குப் பிறகு சிறு குழந்தைகள் அவர்களுடைய மதிய உணவை அனுபவித்து சாப்பிடும் போது எழும் சிரிப்பொலிகள் அந்த திறந்தவெளி உணவு அறை முழுவதையும் நிறைக்கிறது.

காலியாக இருக்கும்  தட்டுகளும் ஆவலான முகங்களும்

இப்போது சிரிப்புக்கு பதில் இரண்டாம் முறை பரிமாறுதலுக்காக பாட்டி பாட்டி என்கிற குரல்கள் எழுகின்றன.

பாட்டி, பாட்டி என்கிற சத்தத்திற்குப் பரிசாக இரண்டாவது தடவை உணவு பரிமாறப்படுகிறது

இதற்கிடையில் வயதில் மூத்த மாணவர்கள் தினசரி அசெம்ப்ளிக்காக மேடையில் கூடுகிறார்கள். இன்றைக்கு நகைச்சுவை தினம். அதற்குத் தயாராக யாராவது வந்திருந்தால் அல்லது பேசவேண்டுமென்று யாராவது விரும்பினால் அவர்களுக்கு நேரம் கொடுக்கப்படுகிறது. `யானையும் மரமும்’ என்கிற சிறிய  நாடகத்தை மாணவர்கள் நடித்துக் காண்பிக்கிறார்கள்.

யானையும் மரமும்
சில மாணவர்கள் வினாடி-வினா நடத்துகிறார்கள். வேறு சிலர் ஜோக்ஸ் சொல்கிறார்கள்

பெரும்பாலும் மேல் வகுப்புகளில் படிக்கும் குழந்தைகள் பாராட்டுகளைத் தட்டிச் செல்கிறார்கள்.

பார்வையாளர்களை ஈர்க்கும் அன்றைய காமெடியன்கள்

மதிய உணவுக்குப் பிறகு குழந்தைகளுக்குக் கிடைக்கும் கொஞ்ச ஓய்வு நேரத்தில் அவர்களுக்கு மிகவும் விருப்பமான ஹூலா-ஹுப்ஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

பள்ளிக்கூடத்தின் ஹூலா-ஹூப்பர்களின் நிகழ்ச்சி

மதிய உணவு இடைவேளை முடிந்தவுடன் மாணவர்கள் அவர்களுடைய வகுப்பறைகளுக்குத் திரும்பிச் செல்கிறார்கள். சில சிறுமிகள் வகுப்பறையைச் சென்றடையும் வரை தொடர்ந்து விளையாடிக் கொண்டுச் செல்கின்றனர்.

மீண்டும் வகுப்பிற்கு சென்று கொண்டிருந்தாலும் கூட அவர்களால் வளையங்களை விட முடியவில்லை.

மூத்த மாணவிகளான விந்தியாவும் அரவாலியும் நவம்பர் 27 ஆம் தேதி `ப்ராஜெக்ட் டே’ அன்று வெளிவரவிருக்கும் பத்திரிகையை தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். கலை வகுப்பின் போதும், குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடும் போதும் அவர்கள் மிக்கக் கவனத்துடன் தங்களது சுத்தமான கையெழுத்தால் முக்கியமான கருத்துக்களை எழுதிக் கொண்டிருந்தனர்.  

வெளிவரக்கூடிய பத்திரிகைக்கான பக்கங்களைத் திட்டமிடல்
கலையை செய்து முடித்தல்
வரையப்பட்ட கண்ணுக்கான ஓர் இலை
மீண்டும் புன்னகைகளுடனான `குழு புகைப்பட’ நேரம் 

PARIயுடன் 10 வார பயிற்சியின் ஒரு பகுதியாக இந்த புகைப்பட கட்டுரையை அவர் எழுதியிருக்கிறார்.

தமிழில் சித்தார்த்தன் சுந்தரம்

சித்தார்த்தன் சுந்தரம், பெங்களூருவைச் சேர்ந்த இவர் ஒரு சந்தை ஆய்வாளர், தொழில்முனைவோர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இவர் சுமார் பதினோரு புத்தகங்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார். அதோடு பல்வேறு பத்திரிகைகளிலும் தொடர்ந்து பங்களிப்பு செய்து வருகிறார்.

Licensed under CC BY-NC-ND 4.0 by People's Archive of Rural India.